என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜனநாயகன் படத்துடன் மோதுகிறதா பராசக்தி? - ரிலீஸ் தேதி குறித்து பேசிய சுதா கொங்கரா
    X

    ஜனநாயகன் படத்துடன் மோதுகிறதா பராசக்தி? - ரிலீஸ் தேதி குறித்து பேசிய சுதா கொங்கரா

    • சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் பராசக்தி படம் உருவாகி வருகிறது.
    • பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது

    அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், பராசக்தி படம் குறித்து பேசிய அபபடத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, "பராசக்தி' படத்தில் இன்னும் 40 நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது 'மதராஸி' படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கிறார். அதை முடித்துக்கொண்டு அவர் திரும்பியதும் பராசக்தி படப்பிடிப்பை தொடங்குவோம்.

    பராசக்தி படம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் மோதும் என்று நாங்கள் அறிவிக்க இல்லை. படத்தின் ரிலீஸ் முடிவை தயாரிப்பாளர்கள் எடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே, பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×