என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாகுபலி படத்தில் நடிக்க சிவாஜி கணேசன் தான் காரணம் - சத்யராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | Sathyaraj
    X

    'பாகுபலி' படத்தில் நடிக்க சிவாஜி கணேசன் தான் காரணம் - சத்யராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | Sathyaraj

    சம்மதம் என்றால் மட்டுமே கதை சொல்வேன் என அவர் கூறினார்.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம்.

    திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் பாகுபலியில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தது குறித்து சத்யராஜ் மனம் திறந்துள்ளார்.

    அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், " பாகுபலி கதை சொல்ல ராஜமௌலி சென்னையில் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது ஒரு காட்சியில் நான் நடிகர் பிரபாஸின் காலை எடுத்து என் தலையில் வைக்க வேண்டும், அதற்கு சம்மதமா? என தயக்கத்துடன் கேட்டார்.

    நானும் முதலில் தயங்கினேன். நீங்கள் முழு கதையையும் சொல்லுங்கள், அதன் பின் சொல்கிறேன் என்று கூறினேன். இந்த காட்சியை நடிக்க சம்மதம் என்றால் மட்டுமே கதை சொல்வேன் என அவர் கூறினார்.

    நான் 'திருமால் பெருமை' படத்தில் சிவாஜி அப்பாவின் காட்சியை அவருக்கு உதாரணமாக கூறினேன். அதில் சிவகுமார் சார் காலில் இருக்கும் மெட்டியை சிவாஜி தன் வாயில் வைத்து கழற்ற முயல்வார்.

    எங்களுக்கு நடிப்பு என்றால் சிவாஜி சார்தான். அந்த காட்சியை என் நினைவில் வைத்துக் கொண்டு நான் நடிக்க சம்மதித்தேன்.

    பின்னர், ராஜமவுலி கூறிய முழுக்கதையும் எனக்கு சரியாக பட்டதால், நான் அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோர்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×