என் மலர்
சினிமா செய்திகள்

ஜன நாயகன் பட விவகாரம் குறித்த கேள்விக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில்..!
- தணிக்கை குழு சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகவில்லை.
தணிக்கை குழுவுக்கு எதிராக ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தனி நீதிபதி, சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதித்து, வழக்கை 21-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதனால் 21-ந்தேதி வரை படம் ரிலீஸ் ஆகுமா? என்பது சந்தேகம்தான். படக்குழு தற்போது உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் விவகாரம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திக்கேயன் "ஒரு ரசிகரின் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு, இந்தத் திரைப்படம் திரையுலகிற்கும் திரையரங்குகளுக்கும் மிகவும் முக்கியமானது. இது எப்போது வெளியானாலும், அது அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்" என்றார்.






