'அநியாயத்தின் உச்சகட்டம்' - ஜனநாயகனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி

ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். பொங்கல் அன்னைக்கு படம் வரலைன்னா என்ன... படம் வர்ற நாள் தான் நமக்கு பொங்கல்
'அநியாயத்தின் உச்சகட்டம்' - ஜனநாயகனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி
Published on

விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "அநியாயத்தின் உச்சகட்டம் இதுவெல்லாம். ஆனா நீங்க பண்ணுங்க... நீங்க பண்ண பண்ண அவங்க மேலே மேல போயிட்டே இருப்பாங்க... பொங்கல் அன்னைக்கு படம் வரலைன்னா என்ன... படம் வர்ற நாள் தான் நமக்கு பொங்கல்... சும்மாவே ஜன நாயகன் வேற லெவல் பிளாக்பஸ்டர் தான்... என்னமோ நினைச்சி தெரியாம நீங்க பண்ண விஷயத்தால சினிமா வரலாற்றிலேயே யாருமே மறக்க முடியாத யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நாங்க பண்ணிக்காட்டுவோம்... வைட் பண்ணுங்க... வைட் பண்ண நாங்க ரெடி அந்தளவுக்கு படம் ஒர்த்... நீ வா தல நாங்க இருக்கோம்..." என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com