'தக் லைஃப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது.தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'தக் லைஃப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தது.

இந்நியைலில், தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வரும் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பீட்டு இரண்டு தக்ஸ் எனவும் பதிவிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com