என் மலர்
சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் முதுகெலும்பு நம்ம பாக்யராஜ்- ரஜினி புகழாரம்
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு (நேற்று) பாக்யராஜ் பிறந்தநாள். அவரை சம்மதிக்க வைத்து இந்த விழாவை நடத்தணும் என்று பூர்ணிமா எடுத்த முயற்சி கொஞ்ச நஞ்சம் இல்ல. முதலே என்னிடம் சொன்னார்கள், நீங்கள் வந்தா தான் அந்த விழா நடத்துவேன் என்று. அதற்கு நான் கண்டிப்பா வர்றேன். பாக்யராஜ்-க்கு இல்லாததா என்று இந்த விழாவிற்கு வந்து இருக்கேன். 70-களில் 3 ராஜாக்கள் தமிழ் சினிமாவிற்கு வந்தார்கள். ஒன்று இளையராஜா, இன்னொன்று பாரதிராஜா, மற்றொன்று பாக்யராஜ். இந்த மூன்று பேரும் ஒவ்வொரு துறையிலும் பறந்தார்கள். இன்னும் பறந்துக்கிட்டு இருக்கிறார்கள். அதனால் தான் இத்தனை பேர் இங்கு வந்திருக்கிறீர்கள்.
அதுல வந்து இளையராஜா ஒன்லி இசை, பாரதிராஜா ஒன்லி திரைக்கதை, இயக்கம்... ஆனா நம்ம பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு, இசையும் பண்ணியிருக்கார். எல்லோருக்கும் தெரியும் திரைக்கதையில் எவ்வளவு வல்லவர் என்று. ஒரு கதை நல்லா இருந்தா கூட திரைக்கதை சரியில்லை என்று சொன்னால் அது எடுபடாது.
கதை சுமாரா இருந்தா கூட திரைக்கதை நல்லா அமைந்தால் அந்த படம் ரொம்ப நல்லா போகும். அந்த திரைக்கதை தான் தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு. அது முதுகெலும்பு நம்ம பாக்யராஜ் சார்.
இந்தியாவிலேயே திரைக்கதையில் மன்னர் என்று சொன்னால் சலீம் சாகீத். அதுக்கு பிறகு இணையா சொல்லணும் என்றால் நான் பாக்யராஜ் சாரை சொல்வேன்.
ஏன்னா இப்போ வந்து Action Oriented, Male oriented அதை தான் சலீம் சாகீத் பண்றார். ஆனா பாக்யராஜ் சார் எல்லா lady oriented படத்தில் வந்து ஹீரோயிசம் கொண்டு வந்தாங்க. அது சாதாரண விஷயம் இல்லை.
70-களில் ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், கேஎஸ் கோபால கிருஷ்ணன் எல்லாரும் lady oriented படத்தை தான் எடுத்தாங்க. அதுல ஹீரோக்களுக்கு அவ்வளவா வேலை இருக்காது. இவர் அதில் ஒரு மாற்றம் கொண்டு வந்து லேடிஸ் வந்து மெயினா வந்தா கூட இவரோட அந்த கதாபாத்திரம் பார்க்கிறவர்களுக்கு காம்பீர் மாதிரி தெரிந்தா கூட சகல நல்ல குணங்களுடன் அந்த கதாபாத்திரம் ஜொலிக்கும்.
அந்த மாதிரி யாரும் பண்ணதே கிடையாது. ஒன்லி பாக்யராஜ். அப்போ பண்ண ஒரு சார்லி சாப்ளின். ஒவ்வொரு படத்தையும் புரட்சிக்கரமா எடுத்து இருப்பார். புரட்சிக்கரமா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






