என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குட் பேட் அக்லி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட பிரியா வாரியர்
    X

    குட் பேட் அக்லி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட பிரியா வாரியர்

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'
    • பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து நெகிழ்ச்சி பதிவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " இந்த படத்தில் உங்களுடன் நடித்ததில் பெருமை கொள்கிறேன். படப்பிடிப்பின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரை படக்குழுவில் உள்ள அனைவரையும் நீங்கள் கவனித்துக் கொண்டதை பார்த்து பூரிப்பு அடைகிறேன். உங்களுடைய செலவு செய்த நேரத்தை என்றும் மறக்க மாட்டேன். எவ்வலவு உயரம் போனாலும் உங்களைப் போல் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். மீண்டும் உங்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்." என கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிடிஎஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×