என் மலர்
சினிமா செய்திகள்

வைகைப்புயலுடன் நடனப்புயல்... வடிவேலுவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா
- மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது.
- பிரபுதேவா - வடிவேலு மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது.
மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது. இதில் பிரபுதேவா - வடிவேலு மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது.
வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை. இந்நிலையில், வடிவேலுவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரபுதேவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ""தை பிறந்தால் வழி பிறக்கும். உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும். இப்படிக்கு, புயலும் புயலும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.






