என் மலர்
சினிமா செய்திகள்

கூலிக்கு U/A சான்றிதழ் கோரி மனு- சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும்.
- கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதைதொடர்ந்து, கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசa மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுவில்," அதிக வன்முறை காட்சிகள் இருந்த கேஜிஎப் மற்றும் பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவிலான சண்டை காட்சிகள் உள்ளதால், கூலி படத்துக்கு A சான்றதழ் வழங்கப்பட்டதாக சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






