என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    படையப்பா ஹிட்.. பாபா ரிஸ்க்..!- ரஜினியிடம் Feedback சொன்ன பாக்யராஜ்
    X

    படையப்பா ஹிட்.. பாபா ரிஸ்க்..!- ரஜினியிடம் Feedback சொன்ன பாக்யராஜ்

    படையப்பா கதை குறித்து பாக்யராஜ்யிடம் கூப்பிட்டு சொன்னேன்.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.

    அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    பாக்யராஜ்க்கு மிகப்பெரிய ப்ரஸண்ட் என்றால் நம்ம பூர்ணிமா பாக்யராஜ். அவர் கூட தங்கமகன் படத்தில் நடித்தேன். அப்போ அவங்க இந்தியில தான் பேசுவாங்க. மும்பையில் பிறந்து வளர்ந்தது. எல்லோர்கிட்டயும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்க. யார்கிட்டயும் ரொம்ப பேசமாட்டாங்க.

    அப்படி இருக்கும்போது இவங்க பாக்யராஜை கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னப்போ என்னால நம்ப முடியலை. ஏன் என்றால் நம்ம ஆளுக்கு இங்கிலீஷ் தெரியாது, இந்தி சுத்தம்.. இது எப்படி என்று சொல்லும்போது.

    இங்க பார்த்தீங்கன்னா பாக்யராஜை படப்பிடிப்பு தளத்தில் ஒரு தடவை இயக்குனராக, நடிகராக பார்த்தாங்கண்ணு சொன்னா ஆம்பளைங்களுக்கே அவர் மேல காதல் வரும்.

    நான் இப்போ சொல்றேன். மாடலேஷன் எல்லாம் பாக்யராஜ் சொல்லி கொடுத்தது தாங்க எனக்கு. சில சப்ஜெட்களில் டவுட் வந்தது என்றால் பாக்யராஜ் கிட்ட தான் கேட்பேன். படையப்பா கதை குறித்து பாக்யராஜ்யிடம் கூப்பிட்டு சொன்னேன். அதற்கு அவர் கதையை கேட்டு சொன்னார்.

    சார் கதை ரொம்ப நல்லா இருக்கு. நீலாம்பரி கேரக்டரை மட்டும் சரியா எழுதணும். அதை செய்தாலும் படம் ஹிட்ஆகிடும். படம் எங்கேயோ போயிடும் என்றார். அதேப்போல் பாபா படக்கதை சொல்லும் போது, இது கொஞ்சம் ரிஸ்க்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×