என் மலர்
சினிமா செய்திகள்

கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது - அமீர் கான்
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அமீர் கான் கூலி திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர் " கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. என்னுடைய கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்" என கூறியுள்ளார்.
திரைப்படம் கண்டிப்பாக வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.