என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மலையாள வெற்றியை தொடர்ந்து தமிழில் வெளியாகும் மோகன்லாலின் `தொடரும்
    X

    மலையாள வெற்றியை தொடர்ந்து தமிழில் வெளியாகும் மோகன்லாலின் `தொடரும்'

    • ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார்
    • துடரும் திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார்.

    பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது.

    துடரும் திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

    இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தை தமிழில் படக்குழு வெளியிடவுள்ளது. திரைப்படம் தமிழில் தொடரும் என்ற தலைப்பில் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×