என் மலர்
சினிமா செய்திகள்

கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான 'மாஸ்க்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்!
- ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தேர்தலில் விநியோகிக்க வைத்திருந்த ரூ.440 கோடி பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் தொடர்பான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து 'மாஸ்க்' படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது.
இந்த நிலையில், 'மாஸ்க்' படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகளவில் இப்படம் 2 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நேற்றுமுன்தினம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமும் 'மாஸ்க்' தான். இதன்மூலம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 திரைப்படமாக 'மாஸ்க்' அமைந்திருக்கிறது.
கடைசியாக கவின் நடிப்பில் வெளியான 'கிஸ்' திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.40 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






