என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காக்கா- திரைவிமர்சனம்
    X

    காக்கா- திரைவிமர்சனம்

    கெவின் டிகோஸ்டா இசை மற்றும் பின்னணி இசை காமெடி படத்துக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்.

    மதுரையில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகி ரோஸ்மினின் திருமணம் மண மேடை வரை வந்து மாப்பிள்ளையான தேனி கே பரமன் மோசமானவன் என தெரிந்து நின்று விடுகிறது. அதன் பின் அவன் தொல்லை தாங்காமல் குடும்பமே சென்னைக்கு வருகிறது.

    வந்த இடத்தில் நாயகியின் தங்கை சாய் தன்யாவை கூலி வேலை பார்க்கும் சென்றாயன் காதலிக்கிறார். முதலில் அக்காவுக்கு திருமணம் நடந்தால் தான் தங்கையை தான் கரம் பிடிக்க முடியும் என சென்றாயன் அதற்கான வேலைகளிலும் இறங்குகிறார்.

    ஒரு கட்டத்தில் நாயகி ரோஸ்மினுக்கு இனிகோ பிரபாகர் மேல் காதல் வருகிறது. என் அக்காவுக்கு அவன் விரும்பியவனை திருமணம் செய்து வைத்தால் நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்கிறார் சாய் தன்யா.

    அதே நேரம் மதுரையில் இருந்து நாயகியை அடைந்தே தீருவேன் என கிளம்புகிறார் தேனி கே பரமன். இந்த முக்கோண சூழலில் நாயகி விரும்பியபடி திருமணம் நடந்ததா? சென்றாயன் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிகதை..

    நடிகர்கள்

    நாயகனாக இனிகோ பிரபாகர் திரையில் தோன்றும் நேரம் கொஞ்சம் குறைவு தான் என்றாலும் நாயகனுக்குரிய குணங்களுடன் அமைந்த ஒரு கதாபாத்திரம். மரக்கன்று நடுவதின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு இயற்கை ஆர்வலராக நடித்திருக்கிறார். நாயகியாக ரோஸ்மின். முதிர்ச்சியான நல்ல நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

    சென்றாயன், ஹீரோவை விட திரையில் அதிகம் தோன்றுபவர். ஆனாலும் தனக்கே உரிய காமெடி சென்ஸ் மூலம் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சாய் தன்யா ஏற்கனவே சில காமெடி கலந்த காதல் படங்களில் நடித்தவர், இந்த படத்திலும் அவரின் குழந்தைத்தனம் கலந்த அந்த அழகோடு நம்மை ரசிக்க வைக்கிறார். ரோஸ்மின் முழுக்க சீரியஸ் என்றால் இவர் வரும் காட்சிகள் கலகலப்பு. இவர்களை தாண்டி நானே களத்துல இறங்குறேண்டா என இயக்குனர் தேனி கே பரமன் அவர் பங்குங்கு வந்து ரகளை செய்கிறார்.

    இயக்கம்

    இயக்குனர் தேனி கே பரமன். வன்முறை படங்களாக வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தானும் அதற்குள் சிக்கிக் கொள்ளாமல் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பழைய கதை தான் என்றாலும் படத்தை காமெடி கலந்து கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். ஆங்காங்கே காட்சிகளில் உள்ள இழுவையை தவிர்த்திருக்கலாம்.

    இசை

    கெவின் டிகோஸ்டா இசை மற்றும் பின்னணி இசை காமெடி படத்துக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    சுரேஷ்குமார் ஒளிப்பதிவில் சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் என சுற்றி சுற்றி படம் பிடித்திருந்தாலும் பார்ப்பதற்கு ஏதுவாக காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    ரேட்டிங்-1/5

    Next Story
    ×