என் மலர்
சினிமா செய்திகள்

ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி- திரைவிமர்சனம்
படத்தின் ஆரம்பத்திலேயே இளம்பெண் (ஜெனி) ஒருவரை மர்மகும்பல் கொடூரமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொலை செய்துவிடுகின்றனர். இதுபோன்ற சில கொலைகளும் அங்கு நடக்கிறது. ஆனால் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை.
ஜெனியின் நெருங்கிய தோழிதான் படத்தின் கதாநாயகி. பள்ளியில் தொடங்கிய நட்பு இருவரும் நீட் தேர்வு எழுதி மருத்துப் படிப்பில் சேரும் தருவாயில் ஜெனியின் கொலை சம்பவம் நிகழ்கிறது.
ஜெனியின் மரணத்திற்காக போராட நினைக்கும் கதாநாயகி, மருத்துவம் படிக்காமல் சட்ட படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது தோழியின் மரணத்திற்காக சட்டரீதியாக போராடுகிறார்.
இறுதியில் ஜெனிக்கு நீதி கிடைத்ததா? குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி, வலியையும் துயரத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிகளில் உணர்ச்சிகரமான நடிப்பு அனைவரையும் கவர்கிறது. காவல்துறை அதிகாரியாக வரும் நடிகையும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதி, குறிப்பாக ஒரு இளம்பெண்ணுக்கு (ஜெனி) நேரும் பாதிப்பு மற்றும் அதற்காக அவரது குடும்பமும் சமூகமும் போராடும் நீதியைப் பற்றியதுதான் இந்தக் கதை. சட்டப் போராட்டங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒரு வழக்கின் போக்கை எப்படி மாற்றுகின்றன என்பதை யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
வழக்கமான பழிவாங்கும் கதையாக இல்லாமல், சட்டத்தின் மூலமாக நீதியைத் தேடும் 'கோர்ட் ரூம் டிராமா' பாணியில் விறுவிறுப்பாக நகர்கிறது.
சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் கூர்மையான வசனங்கள் படத்திற்குப் பெரிய பலம். ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தை போரடிக்காமல் கொடுத்த இயக்குநருக்குப் பாராட்டுகள்.
இசை
படத்தின் பின்னணி இசை கதையின் கனத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
படத்திற்குத் தேவையான அழுத்தமான காட்சிகளை இவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.






