ஒரே பேரே வரலாறு... 'ஜனநாயகன்' படத்தின் 2வது சிங்கிள் ப்ரோமோ வெளியானது

ஜன நாயகன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறதுஇப்படத்திற்கு அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒரே பேரே வரலாறு... 'ஜனநாயகன்' படத்தின் 2வது சிங்கிள் ப்ரோமோ வெளியானது
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com