ஜனநாயகன் பட விவகாரம்: தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது?
ஜனநாயகன் பட விவகாரம்: தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் தற்போதுவரை தணிக்கைக் குழு, படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. 

கடந்த டிசம்பர் 19 அன்று படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தநிலையில்,

"பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது. அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார். ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

யாருமே இன்னும் படத்தை பார்க்காத நிலையில் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ள நிலையில் யாரோ ஒருவர் அளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள்." என தயாரிப்பு நிறுவனம் வாதங்களை முன்வைத்தது. 

இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது? என படக்குழுவுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கை நாளை (ஜன.7) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com