என் மலர்
சினிமா செய்திகள்

சமந்தா அவரோட Live in-ல இருக்காங்களா? - மேலாளர் கொடுத்த விளக்கம்
- சிடாடெல் ஹனி பனி என்ற வெப் தொடரில் சமந்தா நடித்தார்.
- இந்த தொடரை பிரபல இயக்குனரான ராஜ் இயக்கினார்.
தென்னிந்திய சினிமா நடிகைகளில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. இவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சில மாத காலங்களாக திரைப்படம் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தது.
அதற்கு முன் சிடாடெல் ஹனி பனி என்ற வெப் தொடரில் சமந்தா நடித்தார். இந்த தொடரை பிரபல இயக்குனரான ராஜ் இயக்கினார். இந்நிலையில் இயக்குநர் ராஜும் சமந்தாவும் லிவ்-இன் ரெலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும். விரைவில் இருவரும் ஜோடியாக மும்பையில் குடியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் சமந்தாவின் மேலாளர் பதிலளித்துள்ளார். சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் இனி திருமணமே வேண்டாம் என கூறி இருந்தார். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். அவர்களுக்கு இடையே அவ்வாறு எந்த ஒரு பந்தமும் இல்லை என கூறியுள்ளார்,






