என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    GOAT டிரைலரை பார்த்து அஜித் சொன்ன விஷயம் - வெங்கட் பிரபு லேட்டஸ்ட் அப்டேட்
    X

    GOAT டிரைலரை பார்த்து அஜித் சொன்ன விஷயம் - வெங்கட் பிரபு லேட்டஸ்ட் அப்டேட்

    • கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

    படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக அமைந்துள்ளது.

    டிரைலர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு கூறியதாவது " கோட் படத்தின் டிரைலரைப் பார்த்து நடிகர் அஜித் குமார் டேய் சூப்பரா இருக்கு டா. என்னோட வாழ்த்துகளை விஜய் மற்றும் படக்குழுவினர் தெரிவித்துவிடு" என்று கூறினார் என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×