அரசனில் இணைந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட நடிகை

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசனில் இணைந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட நடிகை
Published on

வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'அரசன்' படத்தில் நடிகை யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மற்றும் 'ஹார்ட் பீட்' தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை யோகலட்சுமி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com