என் மலர்
சினிமா செய்திகள்

கெத்து தினேஷ் நடிப்பில், "கருப்பு பல்சர்" வெளியாகும் தேதி அறிவிப்பு
யோஷோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில், டாக்டர் சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள "கருப்பு பல்சர்" திரைப்படம், ஜனவரி 30
ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம் படக்குழுவை பெரிதும் உற்சாகப்படுத்தியது.
பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படி தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்தலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன், அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் அசத்தியுள்ளார் கெத்து தினேஷ்.
இப்படத்தில் தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளனர். வில்லனாக பிரின்ஸ் அஜய் நடித்துள்ளார்.
இவர்களுடன் மன்சூர் அலிகான், சரவணன் சுப்பையா, கலையரசன் கன்னுசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இன்பா பாடல் எழுதி இசையமைத்துள்ளார். தமிழிரின் பாரம்பரிய களத்தில் கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.






