கேம் சேஞ்சர் படத்தின் 3வது சிங்கிளான 'லைரானா' பாடல் வெளியானது

ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் 3வது சிங்கிளான 'லைரானா' பாடல் வெளியானது
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் 3வது சிங்கிளான 'லைரானா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார்.

இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com