என் மலர்
சினிமா செய்திகள்

4 வாரங்களை கடந்து வெற்றிநடைப்போடும் `F1'
- ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார்.
- திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
உலகம் முழுவது உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 76.5 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் F1 முக்கிய இடத்தில் உள்ளது.
காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் F1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.






