என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விடுதலைக்கு முன்பு சினிமா மாணவன்... இப்போது மார்க்சிஸ்ட் மாணவன் - இயக்குனர் வெற்றிமாறன்
    X

    விடுதலைக்கு முன்பு சினிமா மாணவன்... இப்போது மார்க்சிஸ்ட் மாணவன் - இயக்குனர் வெற்றிமாறன்

    • தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள்.
    • ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார்.

    மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது:

    தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள். அந்த தலைவர்களை நமக்கு தெரியவே இல்லை. அது மாதிரி நமக்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கேயே இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார். அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார். அடுத்த தலைமுறையும் ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நின்று கேள்வி கேட்க போகிறார்கள்.

    விடுதலைக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது ஒரு மார்க்சிஸ்ட் மாணவனாகவும் இருக்கிறேன்.

    எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சிய கட்டமைப்பு மேல் கட்டமைக்கப்படவில்லை என்றால் ஏதோ கட்டத்தில் மக்களுக்கு எதிர்நிலையில் போய் நின்று விடும் என்பது என்னுடைய புரிதலாக உள்ளது.

    இதெல்லாம் 4 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட விஷயம் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×