என் மலர்
சினிமா செய்திகள்

வெளியானது ஜனநாயகன் நான்காவது பாடல்!
- அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
- படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஜன நாயகன் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் தேதி (நாளை) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்றும் படத்தின் நான்காவது பாடலான ராவண மவன்டா பாடலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, ஜன நாயகன் படத்தில் இருந்து தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று நான்காவது பாடல் வெளியாகி உள்ளது.






