அனிருத் இசைநிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிக்கை!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.அனிருத்தின் இசை கச்சேரி கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைப்பெற இருந்தது
அனிருத் இசைநிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிக்கை!
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவரது இசையில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

அனிருத்தின் இசை கச்சேரி கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைப்பெற இருந்தது ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பு இருந்ததால் இன்னும் பெரிய இடத்தில் வைக்கலாம் என முடிவு செய்து அதனை நிறுவனம் ரத்து செய்தது.

பின் சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூரில் இசை கச்சேரி நாளை நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த இசை கச்சேரி நடத்த கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் அனுபதி பெறாமல் இதனை நடத்துகின்றனர் எனவும் செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பனையூர் பாபு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்துள்ளனர். இதற்கான தீர்ப்பு இன்று மதியம் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com