என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டDC படக்குழு
    X

    லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட'DC' படக்குழு

    • டிசி படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார்.

    முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

    காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×