என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காமெடியன் டூ ஹீரோ..!  ஒரே நாளில் வெளியாகும் மூன்று நடிகர்களின் திரைப்படங்கள்
    X

    காமெடியன் டூ ஹீரோ..! ஒரே நாளில் வெளியாகும் மூன்று நடிகர்களின் திரைப்படங்கள்

    • கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெளியாகிறது.
    • ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரன், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.

    ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் நகைச்சுவை நடிகர்களாக களம் இறங்கி வெற்றிப் பெற்றவர்கள். தற்பொழுது இவர்கள் மூவரும் கதாநாயகர்களாக உருமாறி நடித்துள்ளனர். அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. திரைத்துறையில் நகைச்சுவையில் கலக்கிய இவர்கள் கதாநாயகர்களாகவும் வெற்றிப் பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×