search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு அளித்த அபராதம் ரத்து
    X

    திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு அளித்த அபராதம் ரத்து

    • திரிஷா குறித்து மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • மன்சூர் அலிகானுக்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

    நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

    அதனைத் தொடர்ந்து திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த விவகாரத்தில் திரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    மேலும், நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துங்கள் என்று மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார். அத்துடன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

    இதை எதிர்த்து மறுஆய்வு மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.

    இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×