Bigg Boss Season 9: இவருக்கு ரெட் கார்டா! - இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர். கானா வினோத் அடித்த கவுண்டர்கள் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பு ஆக்கின.
Bigg Boss Season 9: இவருக்கு ரெட் கார்டா! - இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?
Published on

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

இந்த சீஸனின் முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து லக்சரி ஹவுஸ் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் தர்பீசு சாம்ராஜ்ஜியம் கானா சாம்ராஜ்ஜியம் என பிக்பாஸ் வீடு பிளவுபட்டு போட்டிகள் நடந்தன. கானா வினோத் அடித்த கவுண்டர்கள் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பு ஆக்கின.

இந்நிலையில், இந்த வார எவிக்ஷனில் கனி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பிரவீன் வெளியேற்றப்பட்டது விமர்சனத்திற்கு உள்ள நிலையில், நல்ல போட்டியாளராக கருதப்பட்ட கனியும் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் கடைசி நேரத்தில் பெண்கள் விஷயத்திலும் சாதி ரீதியாக தவறாக பேசிவரும் திவாகர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com