என் மலர்
சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு அன்பான வேண்டுக்கோள் விடுத்த அல்லு அர்ஜூன்
- அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
- சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார். அவருடைய மகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று தெலுங்கானா சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுக்குறித்து நடிகர் அல்லு அர்ஜூ அவரது தரப்பு கருத்தை முன் வைத்தார்.
இச்சம்பவத்தை குறித்து அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆன்லைனில் அவர்களது கருத்தை அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அல்லு அர்ஜூன் அவர்களின் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுக்கோள் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் அவர்
"ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான மொழி அல்லது நடத்தையை நாட வேண்டாம் என்றும், எப்போதும் போல் தங்கள் உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என் ரசிகர்கள் என போலி ஐடிகள் மற்றும் போலி சுயவிவரங்கள் மூலம் தவறாக சித்தரித்து, தவறான பதிவிட்டு யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






