என் மலர்
சினிமா செய்திகள்

3 நாள் வசூல் விவரம்: குடும்பங்களிடையே நிலையாக நிற்கும் தலைவன் தலைவி
- விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம்,
- திரைப்படம் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ₹9.02 கோடி வசூல் செய்துள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம், வெளியான முதல் வார இறுதியில் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. Sacnilk.com வெளியிட்ட அறிக்கையின்படி, திரைப்படம் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ₹9.02 கோடி வசூல் செய்துள்ளது. இதனுடன், படத்தின் மொத்த இந்திய வசூல் ₹20.77 கோடியாக உயர்ந்துள்ளது.
திரைப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருப்பதால், குடும்பம் குடும்பமாக மக்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். அதுவும் குறிப்பாக புதிதாக திருமணம் செய்தவர்கள் படத்தை மிகவும் ரசித்து பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்படம் வசூலில் 20 கோடி ரூபாயை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படமும் மாரீசன் திரைப்படமும் ஒன்றாக வெளியானது. அப்படத்தை ஒப்பிடும் போது 3 நாட்களில் வெறும் 3.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
Next Story






