என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

X
ஆர்.ஆர்.ஆர்
புதுவிதமாக வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
By
மாலை மலர்20 March 2022 11:38 AM GMT (Updated: 20 March 2022 11:38 AM GMT)

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் புதுவிதமாக வெளியாகவுள்ளது.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கிவுள்ளார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.ஆர்.ஆர்
படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன் மற்றும் டிராமாவாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தை புது விதமாக 3டி வடிவத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக 3டியில் ஆக்ஷன் மற்றும் டிராமாவாக வெளியாகவுள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Next Story
×