என் மலர்
சினிமா செய்திகள்

தனுஷ் - செல்வராகவன்
அசுரன், கர்ணன் வரிசையில் ”நானே வருவேன்” பிரபல தயாரிப்பாளர் புகழாரம்
செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் ”நானே வருவேன்” படத்தை புகழ்ந்து பிரபல தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடிகர் தனுஷுடன் இணைந்திருந்தார். அதன் பிறகு இந்த கூட்டணியின் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ”நானே வருவேன்” படத்தின் அறிவிப்பு மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினர். யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது.
இதனிடையே, நடிகர் தனுஷ் தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால் நானே வருவேன் படப்பிடிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு படங்களின் பணிகளை முடித்துள்ளதால், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனுஷ் - செல்வராகவன்
இந்நிலையில், 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'அசுரன்', 'கர்ணன்' வரிசையில் 'நானே வருவேன்', நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்... தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்.." எனக் குறிப்பிட்டு அத்துடம் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது தனுஷ் ரசிகர்கள் இடையில் பெரும் உற்சாகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
அசுரன், கர்ணன் வரிசையில் #NaaneVaruven நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்...@dhanushkraja நடிப்பில் @selvaraghavan இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்..@thisisysr@omdop@dhilipactionpic.twitter.com/RK75mncYb3
— Kalaippuli S Thanu (@theVcreations) February 14, 2022
Next Story






