என் மலர்

  சினிமா செய்திகள்

  அஜித்
  X
  அஜித்

  கொரோனா 3-வது அலை... வலிமை ரிலீஸ் தேதியில் மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  கொரோனா 3-வது அலை பரவல் தீவிரமாகி உள்ளதால் வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களை இரவில் மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

  இதையடுத்து இந்தி, தெலுங்கு படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருவதாக இருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

  போனிகபூர் அறிக்கை
  போனிகபூரின் பதிவு

  இதுபோல் பிரபாஸ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியாக இருந்த ராதே ஷியாம் படத்தையும் தள்ளி வைத்துள்ளனர். அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில், வலிமை படத்தை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்து இருக்கிறார். தியேட்டர்கள் முழுவதுமாக திறந்தவுடன் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.


  Next Story
  ×