என் மலர்
சினிமா

தமிழக வீரர்களுடன் காணொலி வாயிலாக கமல்ஹாசன் கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்
தமிழ் வீரமே வாகை சூடும் - ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு கமல் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுடன் கமல்ஹாசன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுடன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காணொலி வாயிலாக கலந்துரையாடி உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகை சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்” என கமல் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






