என் மலர்tooltip icon

    சினிமா

    சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான்
    X
    சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான்

    சிம்பு படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை - உறுதிசெய்த கவுதம் மேனன்

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் பெரிய பிளஸ்சாக அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். அதனால் சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 

    ஏ.ஆர்.ரகுமான்

    கடந்த சில தினங்களுக்கு முன் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும், அப்படத்தை ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 
    Next Story
    ×