என் மலர்
சினிமா

சுரேஷ் காமாட்சி, சிம்பு
ஆவலோடு காத்திருந்த சிம்பு ரசிகர்கள்.... அப்டேட் வெளியிட்டு உற்சாகப்படுத்திய மாநாடு படக்குழு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வருகிற பொங்கலன்று (ஜனவரி 14) மாலை 4.05 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படக்குழுவின் இந்த திடீர் அறிவிப்பு சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதே தினத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






