என் மலர்
சினிமா

மனைவியுடன் சௌந்தரராஜா, விஜய்
விஜய்யின் கிரீன் இந்தியா சேலஞ்ச்... டெலிபதி போல் உணர்ந்ததாக பிரபல நடிகர் டுவிட்
விஜய்யின் கிரீன் இந்தியா சேலஞ்சை டெலிபதி போல் உணர்ந்ததாக பிரபல நடிகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு, ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்னும் மரம் நடும் சவாலை நடிகர் விஜய்க்கு விடுத்தார். இந்த சவாலை ஏற்ற நடிகர் விஜய், மரம் நட்டு அசத்திய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
அன்றைய தினத்தில் தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சுமார் 1000 மரக் கன்றுகளை நட்டிருக்கிறார் நடிகர் சௌந்தரராஜா.

தன்னுடைய பிறந்த நாளில் இந்த நிகழ்வு நடந்தது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாக இருப்பதாகவும், தான் நினைத்ததை அவர் செய்ததால், அதனை டெலிபதி போல் உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் சௌந்தரராஜா, சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்
Next Story






