என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினி போட்ட ஒரே டுவிட்.... இந்திய அளவில் டிரெண்டான கந்தனுக்கு அரோகரா
Byமாலை மலர்22 July 2020 8:36 AM GMT (Updated: 22 July 2020 8:36 AM GMT)
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்ட கந்தனுக்கு அரோகரா என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது.
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா, ராஜ் கிரண், லாரன்ஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.... ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா" என பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டை கந்தனுக்கு அரோகரா என்கிற ஹேஷ்டேக்குடன் ரஜினி பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
Next Story
×