என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஷால் நிறுவனத்தில் மோசடி - பெண் கணக்காளர் மீது வழக்கு பதிவு
Byமாலை மலர்8 July 2020 8:33 PM IST (Updated: 8 July 2020 8:51 PM IST)
விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ45 லட்சம் மோசடி செய்த புகாரில் பெண் கணக்காளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் எம்ஜிஆர் தெருவில் பிரபல நடிகர் விழாவுக்கு சொந்தமான சினிமா பட தயாரிப்பு நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஷால் மேலாளர் அரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் போலீசில் கடந்த 2ந் தேதி புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கடந்த 5 வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் கணக்காளர் ரம்யா என்பவர் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய "டிடிஎஸ்" தொகையை போலியான ஆவணங்கள் மூலம் ரூ.45 லட்சம் பணம் மோசடி செய்து அதை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வங்கி கணக்கில் போட்டு நூதனமான முறையில் மோசடி செய்துள்ளார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட (ஐபிசி 408 , 420, 465, 468, 471,471(A )) 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×