என் மலர்tooltip icon

    சினிமா

    சிம்ரன்
    X
    சிம்ரன்

    வைரலான பாடலை டிக்டாக் செய்து மேலும் வைரலாக்கிய சிம்ரன்

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரன், தற்போது வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்டானது. ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ வைரலானது. 

    இந்நிலையில், நடிகை சிம்ரன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே வைரலான பாடலை மேலும் வைரலாக்க உங்களால் மட்டும் தான் முடியும் என பதிவிட்டுள்ளனர்.

    Next Story
    ×