என் மலர்
சினிமா

சந்தோஷ் நாராயணன் - ஜீவா
18 ஆண்டு பழமையான இசையை ஜீவா படத்திற்கு பயன்படுத்திய சந்தோஷ் நாராயணன்
ஜீவா நடிப்பில் உருவான படத்திற்கு 18 ஆண்டு பழமையான இசையை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பயன்படுத்தி இருக்கிறார்.
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜிப்ஸி’. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்திருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் மட்டுமில்லாமல் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் ஜிப்ஸி படத்தில் வரும் தேசாந்திரி பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிறு தகவலை பகிர்ந்துள்ளார். 'தேசாந்திரி பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த இசையமை 2002-ல் கம்போஸ் செய்தேன். சொந்த ஊரில் இந்த பாடலை கம்போஸ் செய்த போது வந்த மழையும், காற்றின் வாசமும் இன்னும் நினைவில் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
Next Story






