search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய், வெற்றிமாறன்
    X
    விஜய், வெற்றிமாறன்

    வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்?

    விஜய்யின் 65-வது படத்தை அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் படம் வசூலில் பல்வேறு  சாதனைகளை படைத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடம் பட இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    வெற்றிமாறன், விஜய்

    இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×