search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    சிம்பு
    X
    சிம்பு

    மீண்டும் தொட்டி ஜெயா இயக்குனருடன் இணையும் சிம்பு

    சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தொட்டி ஜெயா படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார்.
    சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் ஹாரர் படம் தயாராகி உள்ளது. வி.இசட் துரை இயக்கி உள்ளார். படம் பற்றி வி.இசட் துரை கூறியதாவது:- இது வழக்கமான பேய் படம் அல்ல. ஜின் என்ற புது படைப்பை தென் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்துகிறோம். 

    இஸ்லாமிய நூல்களில் பேசப்பட்டுள்ள விஷயம் இது. ஜின் என்ற படைப்பு எந்த உருவத்திலும் வரலாம். மனிதனை விட சக்தி வாய்ந்தது. சாக்‌ஷி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இருந்ததால் சென்சாரில் ஏ சான்றிதழ் தான் தருவோம் என்றார்கள். 

    தொட்டி ஜெயா

    20 காட்சிகளை வெட்டி யூ/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்து அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கி வருகிறேன். அதற்கு அடுத்து சிம்புவுடன் இணைய இருக்கிறேன். அது தொட்டி ஜெயா 2 அல்ல. வேறு ஒரு கதை. தொட்டி ஜெயா 2 கண்டிப்பாக வரும்’ என்றார். 
    Next Story
    ×