என் மலர்
சினிமா

பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்
கருத்துக்களை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்
"கருத்துக்களை பதிவு செய்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விசிக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் வெளியிட்டார்.
சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் "கருத்துக்களை பதிவு செய்". இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் வெளியிட்டார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார்.

படத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக்குழுனருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தொல் திருமாவளவன், இது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், வண்ணியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story






