என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய்சேதுபதி, ராணா
    X
    விஜய்சேதுபதி, ராணா

    ராணா தயாரிப்பில் விஜய்சேதுபதி

    விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தை ராணா டகுபதி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

    எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் முதன்முறையாக தயாரிக்கிறது. தற்போது தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார்.

    விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன்

    தற்போது படக்குழு படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. 2020-ம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. 

    விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம், விஜய் சந்தர் இயக்கும் சங்கத் தமிழன், மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×