என் மலர்
சினிமா

விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன்
விஜய்சேதுபதி நடிப்பது எனக்கு பெருமை- முத்தையா முரளிதரன் நெகிழ்ச்சி
விஜய்சேதுபதி என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளதாக முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளதாகவும், தார் மோஷன் பிக்ஷர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக முத்தையா முரளிதரன் திரைத்துறை வட்டாரத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளதால் இந்த படத்திற்கு '800' என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story






