என் மலர்

  சினிமா

  ஹாலிவுட் படத்தில் ரஜினி பட நடிகை
  X

  ஹாலிவுட் படத்தில் ரஜினி பட நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
  இந்தி படமான கேங்ஸ் ஆப் வசிபூர் படத்தில் அறிமுகமான ஹூமா குரேஷி அதனைத் தொடர்ந்து ஜாலி எல்.எல்.பி, தீத் இஷ்கியா போன்ற முக்கியமான படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களின் பிரதான நடிகையானார். 

  பின்னர், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி ஜரினாவாக ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து தீபா மேத்தா இயக்கிய சர்வதேச படமான லைலா என்ற வெப் சீரிசில் சித்தார்த்துடன் நடித்தார்.   இந்த நிலையில் ஹாலிவுட்டில் மற்றொரு புதிய படத்திலும் ஹூமா குரேஷி முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஜோம்பி வகை படத்தில் டேவ் படிஸ்டாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஹூமா குரேஷி. இப்படத்தை 300, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், ஜஸ்டிஸ் லீக் போன்ற பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜாக் ஸிட்னர் இயக்கவுள்ளார்.
  Next Story
  ×