என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் - நாசர்
Byமாலை மலர்28 April 2019 2:53 PM IST
நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். #NadigarSangam #Nasser
சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று காலை தொடங்கியது.
இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என கூறினார்.
நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த கூட்டத்தில் தேர்தல் பற்றிய ஆலோசனையே முக்கிய விசயமாக இருந்தது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மிகவிரைவில் நியமிக்கப்படுவார். தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார்.
நாளை முதல் தேர்தல் வேலைகள் நடைபெறும். இதேபோன்று நடிகர் சங்க கட்டிட வேலைகளை முடிக்க கடும் முயற்சிகள் செய்து வருகிறோம் என கூறினார்.
Next Story
×